Image Credit: www.blogsvip.com |
மேலும் என் நிறுவனத்தில், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி, ப்ளாக் க்ரியேட் செய்வது எப்படி, க்ரியேட் செய்த ப்ளாக்கை மக்களிடம் கொண்டு செல்வது எப்படி, SEARCH ENGINE OPTIMIZATION என்றால் என்ன, AFFILIATE MARKETING என்றால் என்ன, INTERNET MARKETING என்றால் என்ன, SOCIAL MEDIA MARKETING என்றால் என்ன ஆகியவற்றை பற்றி ட்ரைனிங் கொடுத்து வருகிறேன். இந்த ட்ரைனிங் மூலம், வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம். இதை பற்றி மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள, இந்த லிங்கை Training for Blogging in Madurai க்ளிக் செய்யவும்.
இணையதளத்தில் நாம் அனைவரும், அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், எந்த ஒரு முதலீடுமின்றி வீட்டிலிருந்தபடியே எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்பதுதான்.
இது சாத்தியமா?
இது உண்மைதானா என அனைவருக்கும் சந்தேகம் எழுவது நிச்சயம்.
கண்டிப்பாக இது சாத்தியமே...
எவ்வாறு சாத்தியம்?
ஆன்லைனில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருப்பின், உங்களுக்கு தேவை Googleல் ஒரே ஒரு அக்கவுண்ட் மட்டுமே. நான் பொய் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன்.
உடனடியாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை www.gmail.com க்ளிக் செய்து gmailல் ஒரு அக்கவுண்டு ஓபன் செய்யுங்கள், ஏற்கனவே உங்களிடம் gmail அக்கவுண்ட் இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை.
சரி. இப்பொழுது ஆன்லைன் ஜாப் என்றால் என்ன என்பதை பற்றி பார்போம்.
ஆன்லைன் ஜாப்பை, பல வகைகளாக பிரிக்கலாம், அவை,
- Captcha Entry: சில எழுத்துக்கள் இமேஜ் வடிவத்தில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும், அதை பார்த்து டைப் செய்வதுதான் Captcha Entry. இதன் மூலம், நாம் நிறைய பணமெல்லாம் சம்பாதிக்க முடியாது, ஏனெனில், நாம் 1000 இமேஜ் டைப் செய்து கொடுத்தால் நமக்கு 50 அல்லது 60 ரூபாய் கிடைக்கும். இதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த லிங்கை www.megatypers.com க்ளிக் செய்து பதிவு செய்யவும். 61JV என்ற ரெபரென்ஸ் கோடை பயன்படுத்திக்கொள்ளவும்.
- Ad Posting: மற்ற கம்பனிகளுடைய விளம்பரத்தினை, அவர்கள் சொல்லக்கூடிய வலைத்தளத்தில் அல்லது க்லாசிபீடுகளில்(Classifieds) பதிவு செய்ய வேண்டும். இதன் நம்பகத்தன்மை மிகவும் குறைவு.
- Ad Clicking: மற்ற கம்பனிகளுடைய விளம்பரத்தினை க்ளிக் செய்தால் பணம் கிடைக்கும். இதுவும் அதிக அளவில் பணம் ஈட்ட வாய்ப்பு மிகவும் குறைவு.
- Freelancing: Image Editing, Transcription, Data Entry போன்ற வேலைகளை, சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக கொடுப்பதே Freelancing எனப்படும்.
- Email Reading Jobs: மற்ற கம்பனிகளின் மின்னஞ்சல்களை வாசித்து பார்த்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களை க்ளிக் செய்வது Email Reading Job.
- Image Clicking & Sharing Job: இமேஜ் மற்றும் வீடியோக்களை க்ளிக் செய்தாலோ ஷேர் செய்தாலோ பணம் கிடைக்கும்.
- Article Posting: உங்களுக்கு தெரிந்த விஷயங்களை, 10 வரிகளுக்கு மிகாமல் ஆங்கிலத்தில் டைப் செய்து ஷேர் செய்தால் பணம் கிடைக்கும். இதுவே ஆர்டிகல் போஸ்டிங் எனப்படும்.
- Article Writing: ஒரு ப்ராடக்டை பற்றியோ அல்லது ஒரு கம்பெனி கேட்கக்கூடிய தகவல்களை பற்றியோ 10 அல்லது 20 வரிகளுக்கு மிகாமல் டைப் செய்து கொடுத்து பணம் ஈட்டலாம்.
- Online Tutoring: நீங்கள் ஆசிரியாராக இருந்தால், உங்களுக்கு தெரிந்த சப்ஜெக்டை ஆன்லைன் மூலம் மற்றவர்களுக்கு பாடம் எடுத்து பணம் ஈட்டலாம்.
- Survey Jobs: ஒன்று முதல் இருபது அல்லது அதற்குமேல் கேள்விகள் கேட்கப்படும், அந்த கேள்விகள் அனைத்திற்கும் விடையளித்தால் பணம் கிடைக்கும்.
- Blogging Job: உங்களுக்கு எதில் அதிகமாக ஆர்வம் உள்ளதோ அதைபற்றி தகவல் அளிக்கக்கூடிய வகையில் ஒரு ப்ளாக் க்ரியேட் செய்து பணம் சம்பாதிக்கலாம். ஆன்லைனில் அதிக அளவில் பணம் சம்பாதிக்க, ஒரு ப்ளாக் உதவி செய்கிறது. நீங்கள் க்ரியேட் செய்யக்கூடிய ப்ளாக், எது சம்பந்தமாக வேண்டுமானாலும் இருக்கலாம். எ.கா. கல்வி, பொழுதுபோக்கு, சினிமா, அறிவியல், விளையாட்டு...
சொந்தமாக ஒரு ப்ளாக் க்ரியேட் செய்ய இந்த லிங்கை www.blogger.com க்ளிக் செய்யவும். மேலும் இது பற்றிய தகவல் அறிய How to Create a Blog க்ளிக் செய்யவும்.